தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்:கலெக்டர் கே.விவேகானந்தன் வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      தர்மபுரி
1

 

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2012ம் ஆண்டு முதல் தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, கபாடி, வளைகோல்பந்து, இறகுபந்து, மேஜைப்பந்து, டென்னிஸ் மற்றும் நீச்சல் விளையாட்டுக்களில் போட்டிகள் (10 விளையாட்டுப் போட்டிகள்) நடத்தப்பட்டு வருகிறது.

விளையாட்டுப் போட்டி

2017-18ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, கபாடி, வளைகோல்பந்து, இறகுபந்து, மேஜைப்பந்து, டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டிகள் 24.12.2017 அன்று மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தொடங்கியது.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் என்.நஞ்சப்பன் வரவேற்புரையாற்றினார்கள். கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையுரையாற்றி தொடங்கி வைத்தார்கள். வருவாய் கோட்டாட்சியர் இராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெறும் விளையாட்டு வீரர்கள்ஃவீராங்கனைகளுக்கு தலா ரூ.1000ஃ-ம் இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.750ஃ-ம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.500ஃ-ம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் முதல் இடங்களைப் பெறும் வீரர்ஃவீராங்கனைக மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள்.மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெறும் வீரர்ஃவீராங்கனைகளுக்கு தலா ரூ.1,00,000ஃ-,ம் இரண்டாம் இடங்களைப் பெறும் வீரர் ஃ வீராங்கனைகளுக்கு தலா ரூ.75,000ஃ-ம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர் ஃ வீராங்கனைகளுக்கு தலா ரூ.50,000ம் தமிழக அரசால் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து