குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை அளவு குறையாமல் வழங்க வேண்டும்: கலெக்டர் மு.ஆசியா மரியம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      நாமக்கல்
1

நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் குறித்தும், ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொது விநியோகத்திட்டப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவது குறித்தும் நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு நியாய விலைக்கடைகளில் கலெக்டர் மு.ஆசியா மரியம் நேற்று (26.12.2017) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் உத்தரவு

நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட எ.எஸ்.பேட்டை, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டுப்பாட்டிலுள்ள யுடீ005 நியாய விலைக்கடை எண்- 9 மற்றும் யுஊ014 நியாய விலைக்கடை எண்-16, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக்கடை எண்-11, என்.கொசவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டிலுள்ள என்.கொசவம்பட்டி நியாய விலைக்கடை எண்- 1 மற்றும் நியாய விலைக்கடை எண்- 2 உள்ளிட்ட பல்வேறு நியாயவிலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்தும், தரம் குறித்தும் ஆய்வு செய்தார். விற்பனை செயலி கருவியில் பதிவு செய்யப்பட்ட இருப்பினையும், நியாய விலைக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் இருப்பினையும் ஆய்வு செய்து சரிபார்த்தார். அப்பொழுது நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்க வருகை தந்திருந்த பொதுமக்களிடம் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா எனக்கேட்டறிந்தார். அதற்கு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக கிடைக்கின்றது எனத்தெரிவித்தனர்.

மேலும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை ஸ்மார்ட் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும் தகுதியின் அடிப்படையில் முழுமையாக வழங்கிட வேண்டுமென கலெக்டர் மு.ஆசியா மரியம் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின் போது நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் வை.இளங்கோ, தனி வருவாய் ஆய்வாளர் ஏ.வி.கார்த்திகேயன் உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து