வார்டு மறுவரையறை வரைவு பிரேரணை கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டார்

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      தூத்துக்குடி
tuticorin collector

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற வார்டு மறுவரையறை வரைவு பிரேரணைகள் சம்பந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலர்களால் தமிழ்நாடு அரசு சட்டம் 2317 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாநகராட்சி -60 வார்டுகள் நகராட்சிகள் (2) 54 வார்டுகள் பேரூராட்சிகள் (19)     294 வார்டுகள் ஊரக உள்ளாட்சி அமைப்புகள்  மாவட்ட ஊராட்சி வார்டுகள்  7 வார்டுகள் ஊராட்சி ஒன்றிய வார்டுகள்    174 வார்டுகள்  கிராம ஊராட்சி வார்டுகள்      2943 வார்டுகள்      மொத்த வார்டுகள் எண்ணிக்கையும், உறுப்பினர்கள் எண்ணிக்கையும் மாற்றம் செய்யப்படவில்லை.ஒவ்வொரு வார்டினுடைய மக்கள் தொகையும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் நடைமுறை சாத்தியத்திற்குட்பட்டு ஒரே மாதிரியாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு வார்டின் அமைப்பும் நிலவரைவியல் ரீதியாக அடக்கமான பகுதியாகவும் அருகருகே உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மறுவரையறை செய்யப்படும் வார்டுகள், அவற்றின் நிலவியல் அமைப்பின் அடிப்படையில், அந்த உள்ளாட்சியின் பரப்பிற்குள், வடமேற்கில் துவங்கி, தென்கிழக்கில் முடியுமாறு மாறி மாறியும் தொடர்ச்சியாகவும் எண்ணிடப்பட்டுள்ளது. வார்டு மறுவரை கருத்துருக்கள் 27.12.2017 முதல் 02.01.2018 வரை சம்மந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலகங்களிலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. வரைவு பிரேரணை மீதான மறுப்புரைகள் மற்றும் கருத்துக்கள் உரிய அலுவலரிடம் 27.12.2017 முதல் 02.01.2018 பிற்பகல் 5.45 மணி வரை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.  சுய சான்றொப்பமிட்ட ஆவணங்கள் தரப்பட்டிருந்தால் அவை திருப்பித் தரப்படமாட்டாது. மறுப்புரைகள் மற்றும் கருத்துக்கள் சம்மந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு இறுதி அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து