முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் கலெக்டர் லதா, ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      சிவகங்கை
Image Unavailable

 சிவகங்கை- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட கருதாஊரணி, புதூர் அக்ரஹாரம், அழகப்பா ஊரணி உள்ளிட்ட இடங்களில் மக்கும் குப்பை பிரித்தாக்கம் முறையில் உரம் ஆக்கப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, பார்வையிட்டார்.
           இதனைத் தொடர்ந்து, காரைக்குடி ரஸ்தாவில் நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு உரமாக தயாரிக்கப்படுவதையும், பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்படுவதையும் பார்;வையிட்டு இதுபோன்ற பணிகளில் எத்தனை பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், தினசரி எவ்வளவு குப்பை எடுக்கப்படுகிறது, எவ்வளவு உரமாகத் தயாரிக்கப்படுகிறது என்பதை குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார்.
          பின்னர், தேவகோட்டை உரக்கிடங்கில் அதிக வெப்பநிலையில் திரவம் ஆக்குதல், தொழில் நுட்பத்தின் மூலம் (டீலசழடலளளை)  பிளாஸ்டிக் பொருட்கள் திரவ எரிபொருளாக தயாரிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
          இந்த ஆய்வில் தேவகோட்டை, காரைக்குடி நகராட்சி ஆணையாளர்கள் பார்த்தசாரதி, சுந்தராம்பாள், பொறியாளர்கள் ஜெயபால், ரெங்கராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுந்தர், ரவிச்சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து