தஞ்சையில் 2-ம் தேதி குறைகளை கேட்கிறார் கவர்னர் பன்வாரிலால்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      தமிழகம்
Panwarilal 2017-12 31

Source: provided

தஞ்சாவூர் :  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு வரும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வரும்  2-ம் தேதி மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார்.

தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெறும் சலங்கை நாதம் கலைவிழா நிறைவு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் கலந்து கொள்கிறார்.

மறுநாள் தஞ்சாவூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் மாலை 3 மணி முதல் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.


அப்போது கவர்னரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து