தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மராட்டியத்தில் முழு அடைப்பு போராட்டம் ஊரடங்கு உத்தரவு அமல்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      இந்தியா
pune-battle-of-bhima 2018 01 03

மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மும்பையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜாதீய ஒடுக்கு முறைக்கு எதிராக 200 ஆண்டுகளுக்கு முன் பீமா கோரேகான் என்ற இடத்தில் மிகப் பெரிய யுத்தம் நடந்தது. இதில் பேஷ்வா படையினர் 25 ஆயிரம் பேரும், மகர் படையினர் 500 பேரும் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக பீமா கோரேகானில் வெற்றித்தூண் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி  இந்த நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்று திரண்டு வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு பீமா கோரேகான் வெற்றியை கொண்டாடுவது தேச துரோகம் எனக் கூறி இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் லட்சக்கணக்கான தலித்துகள் கோரேகானில் திரண்டனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.


கலவரம்: இளைஞர் கொலை
இந்த நினைவு தின விழாவில் புகுந்த இந்துத்துவா அமைப்பினர் அங்கு இருந்த தலித் மக்களை தாக்க தொடங்கினர். இது பெரிய கலவரமாக மாறியது. இரண்டு குழுவினரும் மாற்றி மாற்றி தாக்கி கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் தலித் குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த பிரச்சினை டிசம்பர் 1 அன்று நடந்தது. அதற்கு மறுநாள்தான் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. புனே முழுக்க தலித் குழுக்கள் கலவரம் செய்ய தொடங்கினர். பிறகு இது தலித்-இந்துத்துவா கலவரமாக உருவெடுத்தது. புனேயில் இருக்கும் கடைகள், பொது சொத்துக்கள், கார்கள் என எல்லாம் கொளுத்தப்பட்டன.

முதல்வர் தொடங்கி போலீஸ் வரை யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியாத அளவிற்கு பிரச்சினை கட்டுக்கடங்காமல் போனது. புனே குறித்து போலீஸ் சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே கலவரம் மும்பைக்கும் பரவியது. மும்பையின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் கலவரம் தீயாக பரவியது. மும்பை- புனே சாலை மூடப்பட்டது. நிறைய பேருந்துகள் அடித்து உடைக்கப்பட்டன.  இந்த கலவரத்தில் எத்தனை பேர் இறந்து இருப்பார்கள் என்று இதுவரை தெளிவான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முழு அடைப்பு போராட்டம்
கடந்த சில வருடங்களாகவே மும்பையில் தலித்துகள் அதிகம் தாக்கப்பட்டு வருகிறார்கள். தலித்துகள் மீதான தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இந்த பந்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த பந்துக்கு மார்க்சிஸ்ட் உட்பட 250 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அங்கு இன்று வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ரயில் சேவை ரத்து:
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. மும்பை, அவுரங்காபாத், தானே நகரங்களுக்கும் கலவரம் பரவியது. மும்பையில் பள்ளிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மும்பை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த தலித் இளைஞர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

புனேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து மும்பை, புனே செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மும்பையில் கடைகளை அடைக்க கோரி மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து