முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளம்பர தூதரான சல்மான் கான்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

நுகர்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள இமாமி நிறுவனம் தனது சமையல் எண்ணெய் வகைகளை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் சல்மான்கானை விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவன சமையல் எண்ணெய் வகைகளை விளம்பரப்படுத்தும் பணியில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் தற்போது சல்மான் கானும் கை கோர்க்கிறார்.

சல்மான் கான் மூலம் புதிய விளம்பரப் படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளரை சென்றடைய முடியும் என்று நிறுவனத்தின் இயக்குனர் மணீஷ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து