மிதாலிராஜ் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேண்டும் - நடிகர் ஷாரூக்கான் விருப்பம்

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      விளையாட்டு
Shahrukh-Khan 2017 07 22

புதுடெல்லி : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாற வேண்டும் என்று பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார்.

சாதனை வீராங்கனை 

தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வரும் கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவில் அதிகம் பேசப்படும் நபராக மாறி வருகிறார். 35 வயதாகும் இவர், பெண்கள் கிரிக்கெட்டில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை ஆவர். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் ஸ்டார் ஷாரூக்கான் மிதாலியிடம் பல கேள்விகளை கேட்டார். அப்போது பேசிய அவர், மிதாலியை ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பார்க்க வேண்டும் என்று கூறினார்.


கவனம் சிதறுவதில்லை

இதற்கு மிதாலியின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன் பின்பு, ஷாரூக்கானுக்கு பதில் அளித்த மிதாலி, எப்போதும் என்னுடைய சிறந்ததை தர விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய மிதாலி, கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிக்கும் ரகசியத்தை பற்றியும் கூறினார். கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிப்பதால், கவனம் சிதறாமல் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த முடிகிறது என்றும், களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த புத்தகங்கள் உதவுகிறது என்றும் மிதாலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து