முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத்துக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவுக்கு தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

5 வழக்குகள்
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத், கடந்த 1990-ம் ஆண்டு பீகார்  முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவான நிலையில், 2013-ல் ஒரு வழக்கில்  லல்லுவுக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2-வது வழக்கிலும் லல்லு குற்றவாளி என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறை வளாகத்தில் உள்ள உயர் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை விவரம்
இந்த வழக்கில் லல்லு உள்ளிட்ட 15 பேருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரத்தை நேற்று  அறிவிப்பதாக ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. ஆனால், மூத்த வழக்கறிஞர் இருவர் உயிரிழந்ததால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தண்டனை அறிவிப்பது இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டதால் நேற்று ராஞ்சி நீதிமன்றம் முன்பு ராஷ்ட்ரீய ஜனதாதள தொண்டர்கள் ஏராளமான அளவில் கூடி இருந்தனர்.

அவமதிப்பு புகார்
இதனிடையே கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லு மீதான குற்றத்தை ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தீர்ப்பு குறித்து, ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவர் ரகுவன் பிரசாத் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் லல்லுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும். நீதிமன்ற அவமதிப்பு புகாரில் ராஞ்சி சிறப்ப நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து