முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடித்த ஆட்டக்காரர் சச்சின்: ரஜினிகாந்த்

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கோலாலம்பூரில் நடக்கும் நட்சத்திர கலை விழாவில் பங்கேற்க சென்ற ரஜினிகாந்த், மலேசிய பிரதமரை சந்தித்து பேசினார். அதன் பின் மிர்ச்சி சிவாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற பல திரைப் பிரபலங்கள் தங்களின் இளம் பருவ கிரிக்கெட் விளையாட்டு அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், ”நான் ஒரு வேக பந்து வீச்சாளர், சிறு வயதில் சிறந்த கிரிக்கெட் வீரர். எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் நவாப் மேக் பட்டோடி. மேலும் ஏரப்லி பிரசன்னாவை எனக்குப் மிகவும் பிடிக்கும். தற்போதுள்ள இந்திய வீரரில் டோனியை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் எப்போதும் சச்சின்தான்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து