காட்டுபாக்கம் ஸ்ரீமூனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      வேலூர்
Dt  8  AKM  POTO   2

காட்டுபாக்கம் ஸ்ரீமூனிஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று காலை வெகுசிறப்பாக நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், நெமிலி வட்டம், காட்டுபாக்கம், கவரப்பேட்டை கிராமத்து பழைய குளக்கரையில் அருள்மிகு ஸ்ரீமூனிஸ்வரர் ஆலயம் அமைந்திருந்தது.

மஹா கும்பாபிஷேகம்

இந்த ஆலய அருள்மிகு ஸ்ரீமூனிஸ்வரருக்கு நேற்று காலை மேளவாத்தியம், பம்பை உடுக்கையுடன் அபிஷேகமும் நெய்வேத்தியத்துடன் ஆராதனை செய்து அருள்மிகு ஸ்ரீகோட்டானி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

இங்கு பிரமாண்டமான மேடை அமைத்து ஸ்ரீமூனிஸ்வரர் பிரதீஷ்டை செய்யப்பட்டவருக்கு ராஜேந்திரன் மற்றும் லதா தம்பதியர்கள், சங்கர் மற்றும் கீதா தம்பதியர்கள். நாகராஜ் மற்றும் சரண்யா தம்பதியர்கள்; முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. வி.சரவணன், வி.காளிதாஸ், கேசி.ராஜேந்தின், கோபி, ஏகாம்பரம், ரஜினி, உள்ளிட்ட திரளான ஊர் பொதுமக்கள் மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளில் வெளிதாங்கிபுரம் ஆர்.பாலு, கேசிஆர்.ஹரி, ஜெ.சங்கர். மற்றும் ஜி.சரவணன் குருக்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இறுதியில் அன்னதானம் மதியம் வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து