முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டவுன் முதல் டெஸ்ட் போட்டி: 72 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் எளிய இலக்கை அடைய முடியாமல் வெற்றி கைநழுவிப்போனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டௌனில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.  இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

209 ரன்களுக்கு....

டிவில்லியர்ஸ் 65, டூபிளெஸிஸ் 62 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4, அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 73.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2-வது இன்னிங்ஸ்...

அபாரமாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 208 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழத்தொடங்கியது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி மட்டும் 28 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். 36 ஓவர்கள் வரையில் சந்தித்துள்ள இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தவிர்க்க கடுமையாகப் போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் அதிரடி காட்டிய பாண்டியாவும் 1 ரன்னுக்கு நடையைக் கட்டினார்.

தென்ஆப்பிரிக்கா...

இந்தியா வெற்றிபெற இன்னும் 105 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில் அடுத்தடுத்து அனைத்து விக்\கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் தென்ஆப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.  முதல் இன்னிங்ஸில் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் விலகினாலும், 2-ஆவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் அசத்தி வரும் ஃபிலாண்டர் 3, மோர்கல் 2, ரபாடா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர்களை திணறடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து