நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி வணியவியல் துறை முன்னாள் மாணவர்கள் சங்க தொடக்க விழா

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      தூத்துக்குடி
nazareth marcasis old student meet

நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி வணியவியல் துறை பழைய மாணவர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

சங்கம் தொடக்க விழா

நாசரேத் மர்காஸியஸ் கல்லூரி வணியவியல் துறை பழைய மாணவர்கள் சங்க தொடக்கவிழா கல்லூரி கலந்தாய்வு அரங்கில் நடைபெற்றது.விழாவினை பழைய மாணவரும் குருவானவருமான மைக்கேல் ஜெபம் செய்து தொடக்கி வைத்தார்.கல்லூரியின் முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை தாங்கி பேசினார்;. வணிகவியல் துறையின் முதல் பேட்ச் மாணவர் இளங்கோ வரவேற்று பேசினார். வணிகவியல்  துறைத் தலைவரும் கல்லூரியின் துணை முதல்வருமான பாஸ்கர் ராஜபால் வணிகவியல் துறை தொடங்கியது முதல் இன்று வரை என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர்கள் சிந்தியா, சில்வா, வக்கில் ஜெகநாதன் ஜெபராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பழைய மாணவர்கள் சார்பில் பாபா ஞானக்குமார், அகஸ்டஸ், கிருபாகரன், அந்தோனி சேவியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சங்கத் தலைவராக திலகர்,துனைத்தலைவராக ஐசக், செயலாளராக இளங்கோ,இனைச்செயலாளராக எபநேசர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விழா நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவி பெர்சிஸ் சத்யா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் முன்னாள் மாணவரும் பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியருமான பிரின்ஸ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து