திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் முயற்சியால் 30 அடி ஆக்கிரமிப்பு மதில்சுவர் அகற்றம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      சென்னை
TVet

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் பல்லாண்டு காலமாக பிரச்சனைக்குரிய வழிபாதையில் உள்ள 30 அடி ஆக்கிரமிப்பு மதில்சுவரை முன்னாள் எம்.எல்.., கே.குப்பன் முயற்சியால் சென்னை பெருநகரமாநகராட்சி அகற்றியது. திருவொற்றியூர் இரயில்நிலையம் அருகில் உள்ள அண்ணாமலைநகர் ரயில்வேகேட் வழியாக சென்றால் 25க்கும் மேற்ப்பட்ட நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள இரயில் பாதையில் கேட் அடிக்கடி மூடப்படுவதால் மாற்று வழியாக தனியாருக்கு சொந்தமான கிளாஸ் பேக்டரி சாலையில் பொதுமக்கள் சென்று வந்தனர். அந்த வழியாக செல்லவும்; பல்லாண்டு காலமாக பொதுமக்கள் போராட்டத்தின் மூலம் தற்காலிக அனுமதியுடன் சென்று வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்புகளில் 250 வீடுகளை கட்டியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிய வீடுகள் வாங்கி உள்ளன. அவர்களுக்கு அங்கு ஒரு சாலை அமைத்து தரப்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிரடி

கூடுதலாக திருவொற்றியூர் இரயில்நிலையம் சாலையில் சென்று வருவதற்கு ஒரு வழி உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கு 30 அடி சாலை உருவாக்கப்பட்டது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக செல்வதற்கும் சென்னை மாநகராட்சி அனுமதி தந்துள்ளது. ஆனால் அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் மதில்சுவர் அமைத்ததால் பொதுமக்களும் அந்த பகுதியில் உள்ள புதிய பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் முன்னாள் எம்.எல்.., கே.குப்பனிடம் அந்த பகுதி உள்ள 25க்கும் மேற்பட்ட நகர நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு மதில்சுவரை அகற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.., கே.குப்பன் மாநகராட்சி துணை கமிஷனர் திவ்யதர்ஷினியை சந்தித்து பொதுமக்களின் குறைகளை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் நேற்று காலை திருவொற்றியூர் உதவி கமிஷனர் அனிதா உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு சுவர்களை ஜெ.சி.பி.இயந்திரம் மூலம் இடித்து தள்ளி பல ஆண்டுகால பிரச்சனைகளை முடித்து வைத்தார். இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க வட்ட கழக செயலாளர் எம்.கண்ணன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட நகர் நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்;..,கே.குப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து