திருவள்ளுர் தின விழா: தமிழ்ப் படைப்பாளர்கள் கொண்டாட்டம்

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      வேலூர்
Dt  16  AKm  POTO  001 0

திருவள்ளுர் தின விழாவை அரக்கோணத்தில் தமிழப்; படைப்பாளர்களின்; மாவட்ட சங்கத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் தமிழ் படைப்பாளர்கள் மாவட்ட சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஜோதிட வல்லுனரும், கவிஞருமான ஆதிமூலம் தலைமை தாங்கி பேசினார். வரவேற்று பேசிய சங்க தலைவர் சீ.மோகன் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

திருவள்ளுர் தின விழா

சங்க செயலாளர் பா.சீனிவாசன்;. பொருளாளர் பிரபாகரன், கௌரவஆலோசகர் ஆர்.வெங்கட்டரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க புரவலர் ஜி.அசோகன் ஐயன் திருவள்ளுவர் உருவ படத்தினை திறந்து வைத்து பேசினார். ரோட்டரி தலைவர் பி.இளங்கோ மாலை அணிவத்து மரியாதை செலுத்தி பேசினார். டவுன்ஹால் தலைவர் மரு.எஸ்.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி வைத்து பேசினார்.

எஸ்.எம்.எஸ் பள்ளி தலைவர் திருமலை, அருணா கேட்டரிங் வடிவேலன், முருகன் லேப் ஜி.சுந்தரராஜ், ரஜினி கெஜபதி, துரைசதீஷ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்;. யாராலும் அமைக்கபடாமல் இருந்து வரும் திருவள்ளுவர் சிலையை அரக்கோணம் நகரில் தமிழ் படைப்பாளர்கள் சங்கம் அமைப்பது என்றும் அதற்கு மரு.பன்னீர்செல்வம் முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் ஒருமனதாக எல்லோராலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து