முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் அருகே காரில் கஞ்சா கடத்திய கேரள இளைஞர்கள் 5 பேர் கைது

திங்கட்கிழமை, 15 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

தேனி -தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோட்டில் காவல் துறையினரின் சோதனை சாவடி உள்ளது. இன்று காலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கேரள மாநில பதிவு எண் கொண்ட காரில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த அப்துல்லா (23) அபின் (23) ரோலண்ட்(23) முகமது பைசில் (23) இமானுவேல் (20) ஆகியோர் இருந்தனர். 5 பேர் பயணம் செய்த காரை சோதனையிட்டதில் 2 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், காரில் பயணம் செய்த 5 கேரள இளைஞர்களையும் கைது செய்து தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கேரள இளைஞர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில்  கம்பம் வடக்குப்பட்டியில் உள்ள கஞ்சா வியாபாரி லதாவிடமிருந்து கஞ்சாவை வாங்கி எர்ணாகுளத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் காவல் துறையினர் இவர்களிடமிருந்து கஞ்சாவை யாருக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டது? அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த லதாவை கம்பம் காவல் துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சில இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை தொலைத்து நிம்மதியை இழக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து