Idhayam Matrimony

கோபியில் குடுசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட பணியாணை வழங்கும் விழா அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு.

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      ஈரோடு
Image Unavailable

கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டப்பத்தில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கவும் ஆங்கிலம் கற்றவும் 1ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளுக்கும் தினமும் சிறுவர் மலர் மற்றும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நேற்று முன்தினம் அரசாணை வழங்கியுள்ளதாகவும் இதனால் மாணவர்களின் அறிவாற்றலும் ஆங்கிலம் கற்றும் ஆற்றலும் சிறந்து விளங்கும் என்று தெரிவித்துள்ளார்

பணி ஆணை

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரித்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற வீடு கட்ட பணி ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் 750 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணியாணையையும் 112 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் ஆணையையும் 66 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது பேசுகiயில் தமிழகத்தில் தற்போது அம்மாவின் ஆசியுடன் நடைபெற்றுக்கொண்டுள்ள அரசு சிறந்த முறையில் செயல்பட்டுவருவதாகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருவதாகவும் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக படிக்கின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை தருகின்ற கல்வியை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்வும் வருகின்ற காலத்தில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள மாணவர்களைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்ற நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாழும் ஏளை எளிய மக்களுக்கும் வீடின்றி அவதிக்குள்ளாகி உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அளுக்குளி நாதிபாளையம் கொளப்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலம் கையப்படுத்தப்பட்டு குடிசை மாற்றுவாரியத்தினர் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் கீரிப்பள்ளம் ஓடையின் அருகில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெள்ளம் வரும் சமயங்களில் வெகுவாக சிறப்படுகின்றனர் வெள்ளம் பாதித்து சேதங்கள் ஏற்படுகிறது.

மாற்றங்கள்

அவர்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய முன்தினம் சிறுவர்மலர் ஆங்கிலம் கற்றுக்கொள்ள தினசரி நாழிதல் தமிழகத்தில் உள்ள 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கும் வழங்க அதசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆண்டொன்றுக்கு ரூ.4.68 கோடி செலவாகும் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாகவும் அரசு பள்ளிகளில் உள்ள 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் ஒவ்வொரு பிரதிகள் வழங்கப்படும் என்றும் அதன் மூலம் மாணவர்களின் அறிவாற்றலும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் திறனும் சிறந்து விளங்கும் என்றும் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதுமையான திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். இவ்விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிரு~ணன், கோபி பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,கோட்டாட்சியர் கோவிந்தராஜன் வட்டாட்சியர் பூபதி முன்னாள் சிட்கோ வாரியத் தலைவர்சிந்துரவி, மாவட்ட மாணரவரணி செயலாளர்பிரிணியோ கணேஷ், ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்ரமணியம், சிறுவலூர் மனோகரன், கந்தவேல் முருகன், வேலுமணி நகர் வார்டுசெயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து