முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல்காந்தி ஒரு சந்தர்ப்பவாத இந்து: எடியூரப்பா தாக்கு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

மண்டியா : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சந்தர்ப்பவாத இந்து என்று கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

இதுகுறித்து மண்டியாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளையும், கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியின் போது செய்த சாதனைகளையும், தற்போதுள்ள காங்கிரஸ் அரசின் தோல்விகளை மையமாகக் கொண்டு பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

வளர்ச்சி என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் மையப் புள்ளியாக இருக்கும். பகைமை அடிப்படையிலான அரசியலை நாங்கள் முன்னெடுப்பதில்லை.

மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி மலருவது உறுதி. தேர்தல் பிரசாரங்களின்போது மத ரீதியான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்குத் தெரிவித்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு சந்தர்ப்பவாத இந்து. தேர்தல் வந்தால் ராகுல் காந்தி கோயிலுக்குச் செல்கிறார். அவர் கோயில்களுக்குச் செல்வதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்தப் பயனும் கிடைக்காது. முதல்வர் சித்தராமையாவின் இந்து விரோதப் போக்கு மக்களுக்குத் தெரிந்துள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து