முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளரும் நாடுகளில் இந்தியாவுக்கு 62-வது இடம்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள வளரும் பொருளாதார நாடுகள் குறித்த வரிசைப் பட்டியலில் இந்தியா 62-வது இடத்தில் உள்ளது. சீனா 26-வது இடத்திலும், பாகிஸ்தான் 47-வது இடத்திலும் உள்ளன.

உலக பொருளாதார மைய த்தின் ஆண்டு கூட்டத்துக்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த தரவரிசைக் குறியீடு வெளியிடப்படுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை, வருங்கால தலைமுறைக்கான சமூக பாதுகாப்பு அடிப்படை யில் இந்த தரவரிசை அளிக்கப்படுகிறது. 103 நாடுகள் கொண்ட பட்டியலில், மேம்பாட்டை உள்ளடக்கிய வளர்ச்சியில் 29 நாடுகளும், தலைமுறைக்கான சம வாய்ப்பில் 74 நாடுகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து