முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் மலேரியா நோயால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் மலேரியா நோயினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பாராட்டுச் சான்றிதழ்...

சென்னை எழும்பூர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மலேரியா ஒழிப்பு கருத்தரங்கினை துவக்கி வைத்து, மலேரியா ஒழிப்பு பயிற்சி கையேட்டினை வெளியிட்டு, தொற்று நோய் கட்டுப்பாடு பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றிய பூச்சியியல் வல்லுநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் மக்கள்நல்வாழ்வுத் துறையின் தொழுநோய் பிரிவில் 20 ஆண்டுகள் விபத்தில்லாமல் ஓட்டுநராக பணிபுரிந்துவரும் 2 ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு சார்பாக 4 கிராம் தங்க நாணயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

தடுப்பு நடவடிக்கை...

அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தொற்று நோய் பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, சிக்குன்குன்யா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் மற்றும்மலேரியா உட்பட அனைத்து நோய்களும் இத்துறையால் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்துமேற்கொள்ளப்பட்ட உரிய தடுப்பு நடவடிக்கைகளால் வெகுவாகக் குறைக்கப்பட்டதோடு பரவாமல்கட்டுக்குள் உள்ளது.

உயிரிழப்பு இல்லை...

இதில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளால் மலேரியா வெகுவாக குறைக்கப்பட்டு, நமது மாநிலத்தில் மலேரியா ஒழிக்கப்படும் தருவாயில் உள்ளது. இந்தியாவில் மலேரியாவை 2030-ம் ஆண்டிற்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2022-ம் வருடத்திற்குள் மலேரியாவை ஒழிக்க இலக்குடன் அதனை அடைவதற்குதேவையான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 23 மாவட்டங்களில்மலேரியா முழுமையாக ஒழிக்கப்படும் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை மலேரியா நோயினால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குநர் வடிவேலன், இணை இயக்குநர் சரவணன் மற்றும் உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து