விருதுநகர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      விருதுநகர்
29 ktr news

சிவகாசி, - சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியை விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.
தம்பா கைப்பந்து கழகம், விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டி சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்றது. போட்டியை விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. முன்னதாக நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரவிச்செல்வம் தலைமை வகித்தார். மேலஆமத்தூர் விஏஓ ஆம்ஸ்ட்ராங் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் சீனிவாசன், ஜெ.பேரவை நகர செயலாளர் ரமணா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சேதுராமன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி, நகர எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் பள்ளபட்டி அழகர், நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளர் செல்வம் உட்பட பலா் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.7ஆயிரம் கோப்பை, 2வது அணிக்கு ரூ.5ஆயிரம் கோப்பை, 3வது அணிக்கு ரூ.3ஆயிரம் கோப்பை, 4வது அணிக்கு ரூ.2ஆயிரம் கோப்பை வழங்கப்படுகின்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை தம்பா கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து