ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்த ரூ.3.2 கோடி செலவு - தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      தமிழகம்
Rajesh lakkani 2017 01 25

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ. 3 கோடியே 2 லட்சம் செலவிடப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவர் எம்.எல்.ஏ.வாக பதவிவகித்து வந்த ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த ரூ. 3 கோடியே 2 லட்சம் செலவிடப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,

3 மடங்கு செலவு...

வழக்கமாக ஒரு இடைத்தேர்தல் நடத்த சுமார் 70 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக ரூ.3 கோடியே 2 லட்சத்து  64 ஆயிரத்து 386 வரை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. இத்தேர்தலுக்காக வழக்கத்தைவிட 3 மடங்கு கூடுதல் செலவாகியுள்ளது. மேலும் முறையாக கணக்கு காட்டப்பட்டதால் தேர்தலின் போது பிடிபட்ட ரூ.27 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்கள், தேர்தல் விதிமுறைகளை மீறி 28 லட்சத்திற்கும் மேல் செலவிட்டதாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் அது குறித்து ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து