முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் அரசு நிதியை கையாளும் போது தங்கள் சொந்த நிதியை கையாள்வது போல செலவிட வேண்டும்புதுச்சேரி கவர்னர் கிரன்பேடி அறிவுரை

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுவை அரசின் நிர்வாக சீhதிருத்த துறை சார்பில் அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகத்தில் பினபற்ற வேண்டிய சட்டங்கள், விதிகள், நிதி மேலாண்மை ஆகியவை குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் கம்பன் கலையரங்கில் நடந்தது.

 பயிற்சி முகாம்

இந்த பயிற்சியை கவர்னர் கிரன்பேடி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது;-நான் புதுவையில் பணியாற்றுவேன் என்று எதிர்பார்த்தது இல்லை. 10 ஆண்டுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தேன். புதுவையையும் சென்று பாருங்கள் என்று நண்பர் கூறினார். அதனால் புதுவைக்கு வந்து ஆசிரமத்தில் தியானம் செய்தேன். அப்போது ராஜ்நிவாசை சென்று பார்க்கும் படி எனக்குள் ஒரு குரல் ஒலித்தது. இதையடுத்து ராஜ்நிவாசை சென்று பார்த்தேன். அப்போது நான் இதே ராஜ்நிவாசில் கவர்னராக பணியாற்றவேன் என்று நினைத்ததில்லை. இது கடவுளின் கட்டளை. முதல்வர் நாராயணசாமியும், நானும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் நினைத்ததில்லை. நிர்வாகி, அரசியல் வாதிகள் வருவார்கள் போவார்கள் ஆனால் கோப்புகள் நிரந்தரமானது. இதனால் அரசு அதிகாரிகள் கோப்புகளை கையாளும் போது மிக கவனமாக கையாள வேண்டும். அதில் தவறு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள் பணி ஓய்விற்கு பிறகு ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும். அரசு துறைகள் அனைத்திலும் இதுபோன்ற பயிற்சியை நடத்த வேண்டும். ஒவ்வொருவரும் புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும். அரசு நிதியை கையாளும் போது தங்களின் சொந்த நிதியை கையாளவது போல செலவிட வேண்டும். பிற துறை நிதியாக இருந்தாலும் கூட சொந்த நிதியாகவே கருத வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி புதுவையை வளம் பெற செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து