சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் தீபா புகார்

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
deepa(N)

சென்னை: சசிகலா மற்றும் தினகரனால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தில் அறுவறுப்பான கருத்தை பதிவிடுவதோடு, தொலைபேசியிலும் மிரட்டல்கள் வருவதாக தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இதுவரை என் மீது வன்மமான பேச்சுகள் பரப்பப்படுவதாக புகார் அளித்திருக்கிறேன். இந்த முறை ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கிறேன். என்னடைய முகநூல் பக்கத்திலேயே வந்து அறுவறுப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதனை ஆதாரத்துடன் போலீசாரிடம் அளித்துள்ளேன்.


என்னுடைய உயிருக்கும், சுதந்திரத்திற்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினரை சந்தித்து புகார் அளித்துள்ளேன். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் என்னுடைய முகநூல் பக்கத்திலேயே நேரில் வந்து ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். திட்டமிட்டே இது செய்யப்படுவதால் தான் இப்போது புகார் அளித்துள்ளேன். நிறைய தொலைபேசி அழைப்புகளும், பதிவு செய்யப்பட்ட அழைப்புகளும் அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன. அந்த ஆதாரங்களையும் அளித்துள்ளேன்,

நான் நடத்தும் கூட்டத்தில் வன்முறையை தூண்ட நினைக்கிறார்கள், என் வீட்டின் மீது நடந்த தாக்குதலுக்கு என் வீட்டில் இருந்த ஆட்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே என்னை சுற்றி ஒரு சதி நடக்கிறது என்று தீபா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து