முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக பீட்டா தொடர்ந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து நேற்று சுப்ரீம கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மசோதா நிறைவேற்றம்
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை காரணமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

விலங்குகள் நலவாரியம்...
தமிழக அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி சுப்ரீம கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. விலங்குகள் மோசமாக நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், அதற்கு எதிராக மாநில அரசுகள் இதுபோன்ற சட்டங்களை கொண்டு வர முடியுமா? என நீதிபதிகள் ஏற்கெனவே கேள்வி எழுப்பினர்.

5 நீதிபதிகள் கொண்ட...
இது தொடர்பாக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய தேவை இருப்பதால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டிய தேவை இருப்பதாகவும் நீதிபதிகள் கூறினர். இந்நிலையில், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டுள்ளது. 2 நீதிபதிகளுக்கு பதிலாக இனி 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டதால், ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் இதுவரை சிக்கல் இல்லை.

விரைவில் நீதிபதிகள்...
ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கலச்சாரமா, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக மாநில அரசு சட்டதிருத்தம் கொண்டு வர முடியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து இந்த அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து