கரூரில் அறிவியல் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி : கலெக்டர் கு.கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்

கரூர், புலியூர் இராணி மெய்யம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (06.02.2018) தொடங்கி வைத்து மாநில அளவில் கரூர் மாவட்ட மாணவ, மாணவிகள் வெற்றிபெற ஆலோசனைகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அறிவியல் ஆய்வு
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக அரசு பள்ளி பயிலும் பருவத்திலேயே 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளது படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் நோக்கில் ஒரு மாணவனுக்கு ரூ.10,000 வழங்கி அறிவியல் படைப்பகளை உருவாக்கி மாவட்ட அளவில் பங்கேற்க செய்து புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதினை வழங்கி வருகிறது. இதில் மாவட்ட அளவில் இன்று 78 பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவிகள் 78 படைப்புகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த 3 நபர்களுக்கும், ஆறுதல் பரிசு 10 நபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி மாநில அளவில், தேசிய அளவில் வெற்றி பெற வேண்டும். நல்ல அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கி நாட்டிற்கு நல்லது செய்து நற்பெயரை ஈட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணே~;மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர் அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.