பீ.பீ.குளத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு

புதன்கிழமை, 7 பெப்ரவரி 2018      மதுரை
rajancellappa 7 2 18

மதுரை- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.5 பீ.பீ.குளம் நேதாஜி மெயின் ரோடு முல்லை நகரில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  .கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா   திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் .அரசு, உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  .விஜயகுமார், உதவிப் பொறியாளர்  .பாஸ்கரன் சுகாதார ஆய்வாளர்  .ராஜாமணிகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து