மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது நில அபகரிப்பு வழக்கு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      இந்தியா
Giriraj Singh 2018 02 08 0

பாட்னா, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய சிறு மற்றும் குறு தொழில்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலம் நவடா தொகுதி பா.ஜ.க எம்.பி.யான இவர், பாட்னாவின் தனப்பூர் பகுதியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார் எழுந்தது. அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட 33 பேர், தனது நிலத்தை அபகரிக்க முயல்வதாக ராம் நாராயணன் பிரசாத் என்பவர் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய நீதிமன்றம் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கிரிராஜ் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து