எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. புதுவையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு அந்தந்த மாநில வரியை வசூலிக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். இதன்டி தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது புதுவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால் உள்ளுரில் இயங்கும் தனியார் பஸகளின் கட்டணமும் தன்னிச்சையாக உயர்த்தப்ட்டது.
மறியல் போராட்டம்
இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் கம்யூனிஸ்டு எம்எல் சார்பில் கட்டண உயர்வை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வா.சுப்பையா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். கம்யூனிஸ்டு எம்எல் வெங்கடாசுப்பா ரெட்டியார் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இவர்கள் பஸ் நிலைய நுழைவு வாயில் முன்பு வந்து அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் விஸ்வநாதன், தெசிய குழு உறுப்பினர் நாரா கலைநாதன், பொருளாளர் அபிஷேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் சேது செல்வம், துரைசெல்வம், ஆனந்து, சரளா, ஜெயா, தினேஷ் பொன்னையா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் முருகன், பெருமாள், கம்யூனிஸ்டு எம்எல் சார்பில் பாலசுப்ரமணியன் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினரும் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்கள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலிசார் கைது செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025