முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மகாலுக்கு ஆளில்லா விமானம் எடுத்து சென்றால் சிறை தண்டனை

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

ஆக்ரா, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் பார்க்க வருபவர்கள் ஆளில்லா விமானம் எடுத்து சென்றால் சிறை தண்டனை வழங்கப்படும் என ஆக்ரா போலீஸ் சூப்பிரண்டு கன்வர் அனுபம்சிங் எச்சரிக்கை விடுத்தார்.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உள்ளது. இதை கண்டு ரசிக்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மகாலுக்கு உள்ளேயும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆளில்லாமல் பறக்க கூடிய ‘டிரோன்ஸ்’ எனப்படும் மிக சிறிய விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தாஜ்மகாலை சுற்றி 20 தடவை பறந்த ஆளில்லா விமானம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்தடை கொண்டு வரப்பட்டது. இதை மீறி ஆளில்லா விமானம் பறக்க விடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட் டது. ஆனால் தடையை மீறி ஆளில்லா விமானங்கள் பறக்க விட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் பறக்க விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆக்ரா போலீஸ் சூப்பிரண்டு கன்வர் அனுபம்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தடையை மீறி தாஜ்மகாலை சுற்றியோ அல்லது உள்ளேயோ ஆளில்லா விமானம் பறக்க விட்டால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 287 (அத்துமீறி செயல்படுதல்), 336 (உயிருக்கு பாதுகாப்பு இன்மையை உருவாக்குதல்), 337, 338 (பிறருக்கு காயம் ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். மேலும் இதுகுறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் செய்யப்படும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து