முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இருந்து தாற்காலிகமாக விலக உமாபாரதி முடிவு

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      அரசியல்
Image Unavailable

போபால், உடல் நலக் குறைவு காரணமாக அடுத்த மூன்றாண்டுகளுக்கு தீவிர அரசியலில் இருந்து தாற்காலிமாக விலகியிருக்கப் போவதாக மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். அதற்காக தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்த்தமில்லை என்றும், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க தலைமையிடம் தகவல் தெரிவித்துள்ளதாக கூறிய உமா பாரதி, அடுத்த ஆண்டு வரை மத்திய அமைச்சர் பதவியில் தொடருமாறு கட்சியின் தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, அண்மைக் காலமாக மூட்டு வலி மற்றும் முதுகுத் தண்டுவட வலியால் அவதியுற்று வருகிறேன். இதற்கு உரிய சிகிச்சையும், ஓய்வும் எடுக்க வேண்டியுள்ளது. தற்போது எனது உடல்நலன் இருக்கும் சூழ்நிலையில் காலையில் இருந்து மாலை வரை மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு கண்டிப்பாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, அதைக் கருத்தில் கொண்டு அடுத்த மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன். மாநிலங்களவைத் தேர்தலிலும் போட்டியிடும் திட்டமில்லை. அதேவேளையில், கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் பிரசாரங்களில் பங்குபெறுவேன். இது எனக்கு ஒரு தாற்காலிக ஓய்வுதானே தவிர அரசியலில் இருந்து நான் விலகிவிடவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட தீவிர அரசியலில் இருந்தபோது இதுபோன்ற முடிவை எடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து