Idhayam Matrimony

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 23 டிசம்பர் 2025      தமிழகம்
EPS 2024-11-02

சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் ப்யூஸ் கோயலுடனான சந்திப்புக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனசாமி தெரிவித்தார்.

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் நேற்று சென்னை வந்தார். அவர் தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சென்னை லீலா பேலசில் தொகுதி பங்கீடு தொடர்பாக சுமார் ஒன்றரை மணிநேரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சர்  பியூஷ்கோயலுடனான சந்திப்புக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- ”நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அமைச்சர்  பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசித்தோம். மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்ற ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். தி.மு.க. ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து