கால்நடை மருத்துவர்களுக்கான மண்புழு உரம் தயாரித்தல் செயல்முறை விளக்கப் பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
nellai collector

திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள கால்நடை பண்ணையில், கால்நடை மருத்துவர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது.

செயல்முறை விளக்க பயிற்சி

 இப்பயிற்சியினை கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தொடங்கி வைத்தார்.திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் சுமார் 1250 ஏக்கர் நிலப்பரப்பளவில் கால்நடை பராமரிப்புத் துறையின், மாவட்ட கால்நடை பண்ணை செயல்பட்டு வருகிறது. இப்பண்ணையில், கறவை மாடுகள், ஆடு இனங்கள், வெள்ளை பன்றி இனங்கள் வளர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு பண்ணை அமைக்க குட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு வளர்க்கப்படும் ஆடு, மாடுகளின் சாணங்கள் சேகரிக்கப்பட்டு, அவைகள் மண்புழு உரங்களாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுவதை விவசாயிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இன்று கால்நடை மருத்துவர்களுக்கான மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சியினை கலெக்டர்  தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மரு.ராஜேந்திரன், கால்நடை பண்ணை துணை இயக்குநர் மரு.சங்கரகுமார், உதவி இயக்குநர்கள் (தென்காசி) மரு.அருணாசலகனி, (அம்பாசமுத்திரம்) மரு.குருசாமி மற்றும் கால்நடை மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து