Idhayam Matrimony

ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025      தமிழகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,890-க்கும் விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,54 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.

இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. டிச.22-இல் சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1 லட்சத்து 560-க்கும், டிச.23-இல் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2,160-க்கும் விற்பனையானது. டிச.24-இல் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,800-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் (டிச. 25) வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து, ரூ. 1,02,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 12,820-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 12,890-க்கும் விற்பனையானது.

சூரிய மின் தகடு, பேட்டரிகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட மின்சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 254-க்கும், கிலோவுக்கு ரூ. 9,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,54 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து