Idhayam Matrimony

நைஜீரியாவில் பயங்கரம்: மசூதியில் தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025      உலகம்
Suicide 2023 04 29

அபுஜா, நைஜீரியாவில் மசூதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மைதுகுரி நகரில் உள்ள மசூதியில் நேற்று மாலை நேர தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது மசூதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர், உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து