விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2018      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும், உள்ள கிராமத்தில் வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமை மக்களைத் தேடி வருவாய்த்துறை என்னும் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  பிரதி வாரம் ஒரு ஊராட்சியில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வருவாய்த்துறையின் சார்பில் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. மக்கள் பேருந்து ஏறி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்வதால் ஏற்படும் நேரம், செலவு, வேலை இழப்பு ஆகியவற்றை போக்குவதற்காக உங்கள் ஊராட்சிக்கே வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் வந்து குறைகேட்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மா திட்ட முகாம்

அம்மா திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல் (உட்பிரிவு மற்றும் முழு நிலம்), உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்துக்குட்பட்ட நிலத் தாவாக்கள், முதல் பட்டதாரி சான்றிதழ், விதவைச்சான்றிதழ், குடிநீர், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களையும் இந்த முகாமில் பொதுமக்கள் அளித்து, பயன்பெறுமாறு கலெக்டர் இல.சுப்பிரமணியன்  கேட்டுக் கொண்டார்.வரும் பிரதி வெள்ளிக்கிழமை (16.02.2018) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்: விழுப்புரம் வட்டம் காணை குறுவட்டத்தைச் சேர்ந்த சத்திப்பட்டு கிராமம், வானூர் வட்டம் நெமிலி குறுவட்டத்தைச் சேர்ந்த வி.பரங்கினி கிராமம், விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் குறுவட்டத்தைச் சேர்ந்த பெருங்கலம்பூண்டி திருக்கை கிராமம், திண்டிவனம் வட்டம் திண்டிவனம் குறுவட்டத்தைச் சேர்ந்த சிங்கனூர் கிராமம், செஞ்சி வட்டம் செஞ்சி குறுவட்டத்தைச் சேர்ந்த ஜம்போதி கிராமம், மேல்மலையனூர் வட்டம் சாத்தாம்பாடி குறுவட்டத்தைச் சேர்ந்த பாப்பந்தாங்கல் கிராமம், திருக்கோவிலூர் வட்டம் மணலூர்பேட்டை குறுவட்டத்தைச் சேர்ந்த காங்கியனூர் கிராமம், உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி குறுவட்டத்தைச் சேர்ந்த செம்மணங்கூர் கிராமம், கள்ளக்குறிச்சி வட்டம் தியாகதுருகம் குறுவட்டத்தைச் சேர்ந்த வாழவந்தான்குப்பம் கிராமம், சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி குறுவட்டத்தைச் சேர்ந்த மூங்கில்துறைப்பட்டு கிராமம், சின்னசேலம் வட்டம் கல்வராயன்மலை குறுவட்டத்தைச் சேர்ந்த தொரடிப்பட்டு கிராமம், மரக்காணம் வட்டம் சிறுவாடி குறுவட்டத்தைச் சேர்ந்த வடநெற்குணம், கண்டாச்சிபுரம் வட்டம் அரகண்டநல்லூர் குறுவட்டத்தைச் சேர்ந்த தேவனூர் கிராமம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து