நெல்லை மாவட்டம் பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
smart class rooms satarts b nellai Collector

திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம், பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செல்கோ, இந்தியா சோலார் நிறுவனத்தின் மூலம் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி,  கலந்து கொண்டு, சோலார் ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார்.பின்னர், கலெக்டர்  பேசியதாவது-

ஸ்மார்ட் கிளாஸ் ரூம்

தமிழக அரசின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின்  சார்பில், பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராதாபுரம் ஒன்றியம், சீலாத்திகுளம் நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மூலம் அமைக்கபடுவதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பறையில் சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் பாடங்கள் ஸ்மார்ட் டிவியின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சொல்லித் தரப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்திய பின்பு அதன் காட்சிகளை ஸ்மார்ட் டிவியின் மூலம் நேரடிடையாக பார்ப்பதால், மறக்காமல் இருக்க முடியும். நமது மாவட்டத்தில் மின்சார தட்டுப்பாடுள்ள பகுதிகளில் உள்ள சோலார் மூலம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க முயற்சிக்கப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் ஸ்மார்ட்வகுப்பறையின் மூலம் மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆசிரியர்கள் சரியான புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க முயற்சி எடுக்கப்படும்.பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, கிராமத்திலுள்ள அனைவரும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. கழிப்பறை இல்லா வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கும், மக்கா குப்பை பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.  சுகாதாரமில்லாவிடில், கொசு உற்பத்தியாவதுடன், டெங்கு காய்ச்சல் வரவும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பதுடன், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டுமென பேசினார்.தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், திருநெல்வேலி கிரின்சிட்டி லைன்ஸ் கிளப் தலைவர் திருமலை முருகன், செல்கோ நிறுவன உதவி பொது மேலாளர் பிரகாஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துப்பிள்ளை, உதவி தொடக்க கல்வி அலுவலர் கீதா, பாலாமடை பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி தங்கராணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் சொக்கலிங்கத் தேவர் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து