முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண் போல் நடித்து 2 பெண்களுடன் திருமணம் செய்த மோசடி பெண் கைது

சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

நைனிடால்: உத்தரகாண்ட்டில் ஆண் போல் நடித்து இரண்டு பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். வரதட்சணைக் கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட போது, குற்றவாளி ஆண் அல்ல பெண் என்பது தெரிய வந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜினார் எனும் ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணா சென் என்றழைக்கப்படும் ஸ்வீட்டி சென். 31 வயதாகும் இவர், சிறுவயது முதலே ஆண் போன்று உடை உடுத்தி, சிகையலங்காரம் செய்து கொள்வாராம் ஸ்வீட்டி. இதனால் நிஜத்தில் அவரைப் பல பெண்கள் ஆண் என நம்பி காதலித்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஸ்வீட்டி, கிருஷ்ணா சென் எனும் பெயரில் பேஸ்புக்கில் ஆண் போன்று விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார். அவற்றைப் பார்த்து காதல் வலையில் சிக்கிய பெண்களில் வசதி படைத்த நைனிடால் பெண் ஒருவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரிடம் தன்னை வசதி படைத்தவர் போல் காட்டிக் கொண்ட ஸ்வீட்டி, வரதட்சணையாக சுமார் எட்டு லட்சத்திற்கும் அதிகமாக மணப்பெண் வீட்டில் பெற்றுள்ளார். ஆனால், அது போதாது என மேலும் பணம் கேட்டு மனைவியை நச்சரித்துள்ளார். செயற்கையான உறுப்புகளை ஆன்லைனில் வாங்கி அதன்மூலம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுள்ளார் ஸ்வீட்டி. அப்போதுதான் அவர் ஆண் இல்லை என்பது முதல்மனைவிக்கு தெரியவந்துள்ளது.

ஆனபோதும், அதனை வெளியில் சொல்ல முடியாமல் அவர் தவித்து வந்துள்ளார். முதல் மனைவியின் சந்தேகத்தைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டு மீண்டும் பேஸ்புக்கில் காதல் வலை வீசியுள்ளார் ஸ்வீட்டி. அப்போது, கலாதுங்கியைச் சேர்ந்த மற்றொரு பெண் அவரிடம் சிக்கியுள்ளார். திருமணத்திற்குப் பின் அவரையும் வரதட்சணை கேட்டு ஸ்வீட்டி துன்புறுத்தியுள்ளார்.

இரு மனைவிகளையும் மாறி மாறி துன்புறுத்தி ஏமாற்றி பணம் பறித்த ஸ்வீட்டி, அதில் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், நாளுக்குநாள் அதிகரித்த சித்ரவதைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத முதல் மனைவி இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வரதட்சணைக் கொடுமை என்ற புகாரின் அடிப்படையில் தான் ஸ்வீட்டியைக் கைது செய்துள்ளனர். பின்னர் , அவர்களுக்கு ஸ்வீட்டியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது தான் கிருஷ்ணாவாக நடித்துக் கொண்டிருந்தது ஸ்வீட்டி என்ற பெண் என்பது அவர்களுக்குத் தெரியவந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ஸ்வீட்டி சென் மீது, ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நைனிடால் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜன்மேஜே கந்தூரி கூறுகையில், "கிருஷ்ணா சென் எனப்படும் ஸ்வீட்டி சென் மீது முதலில் வரதட்சனை கொடுமை வழக்குதான் பதியப்பட்டது. பின் அவர் ஆண் இல்லை பெண் என மருத்தவ பரிசோதனை மூலம் தெரிந்ததும், வழக்கை மாற்றி பதிந்துள்ளோம். ஸ்வீட்டி சென் வேறு பெண்களை ஏமாற்றினாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

‘ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட செக்ஸ் டாய்ஸ்களைக்கொண்டு, இரு மனைவிகளுடனும் இரவில் மட்டுமே உடலுறவு வைத்துக்கொண்டாதாகவும், அதனால் தான் ஒரு பெண் என்பது அவர்களுக்கு தெரியவில்லை' என்றும் போலீஸ் விசாரணையில் ஸ்வீட்டி சென் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் விசாரணையில் ஸ்வீட்டி மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி வந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஸ்வீட்டி சென்னின் மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவரால் ஏமாற்றப்பட்ட பல பெண்கள் மேலும் அவர் மீது புகார் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து