பேரூராட்சியில் ஊழியர்களே தனி நபர் இல்லக்கழிவறை அமைக்கும் பணியில் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கத் திட்டம் சார்பில் அனைத்து வீடுகளிலும் தனிநபர் இல்லக்கழிவறை அமைக்க வலியுறுத்தி வருகிறது.

கழிவறை கட்டும் பணி

 இதற்கான மானியத் தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணிகள் பேரூராட்சியில் மட்டும் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயனாளிகளின் வீடுகளில் தனிநபர் இல்ல கழிவறைகள் அமைக்கும் பணியானது மணல் தட்டுப்பாடு, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணி நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கழிவறை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விரைவில் 100 சதவீத கழிவறை கட்டும் பணி நிறைவடையும் என எதிர்பாக்கப்படுகிறது.

இது குறித்து செயல் அலுவலர் கேசவன் கூறுகையில் அரசின் திட்டமான தூய்மை பாரத திட்ட இயக்கத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் உத்திரமேரூர் பேரூராட்சியில் தனிநபர் இல்லக்கழிவறை பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள கழிவறை கட்டப்படாத பயனாளிகளை கணக்கெடுத்து அவர்களுக்கான கழிவறைகளை பேரூராட்சி ஊழியர்களே செய்து தர முடிவெடுத்துள்ளோம். அதன்படி மானியத் தொகையில் கழிவறை அமைக்கும் பணியினை பேரூராட்சி ஊழியர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்னும் ஓரிரு மாதங்களில் முழு சுகாதார பேரூராட்சியாக மாறும் வகையில் பேரூராட்சி முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் கழிவறை அமைக்கப்பட்டு முழு சுகாதாரமான பேரூராட்சியாக மாறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து