முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி: பொதுநல மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கி பண முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11,800 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.

சி.பி.ஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து