திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
thiruchenthur murugam temple masi thiruvizha

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.

மாசித்திருவிழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9.05 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார்.   காவல் துணை கண்காணிப்பாளர் தீபு தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரகுராஜன், ஷீஜாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சுவாமி வீதி உலாவின் போது கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மணியம் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து