கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்படும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் விஜயகுமார் எம்.பி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி

கன்னியாகுமரியை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் விஜயகுமார் எம்.பி தெரிவித்தார்.

பொதுக்கூட்டம்

குமரி மாவட்ட அண்ணா திமுக சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் மாவட்ட அதிமுக செயலாளர் விஜயகுமார் எம்.பி தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஞானசேகர், மீனவ கூட்டுறவு இணையத் தலைவர் சகாயம், அம்மா பேரவை தலைவர் கனகராஜ், தொழிற்சங்க தலைவர் காரவிளை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேசிய விஜயகுமார் எம்.பி, பெண்களுக்காக பல திட்டங்களை தந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. பெண்கள் சுயமாக தொழில் செய்ய வழிவகுத்தவரும் அவரே. குமரி மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்ற பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ஆற்றை தூர்வாரி, தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலக்கை அருவி, முக்கடல் அணை போன்ற திட்டங்களும் தொடங்கப்பட உள்ளன. கன்னியாகுமரிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்பட இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் புகையில்லா தமிழகத்தை உருவாக்க பேட்டரி கார்கள் மற்றும் பஸ்கள் தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழிற்சாலையை அமைக்க நெல்லை, குமரி மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் இடம் தேர்வு செய்யப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.கூட்டத்தில் நகர செயலாளர் சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் சந்தோஷ், தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் லெட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து