போந்தவாக்கத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி கபடி போட்டி

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      காஞ்சிபுரம்
Gumudipundi 0

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பாராட்டு

கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கத்தில் போந்தவாக்கம் ஊராட்சி அதிமுக சார்பில் கபடி போட்டி கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்றது. போட்டிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார் துவக்கி வைத்தார். நிகழ்விற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு ஒன்றிய குழு துணை தலைவர் எஸ்.எம்.ஸ்ரீதர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் இரா.சதீஷ் முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாது, ஆந்திர மாநிலம் சத்தியவேடு, நகரி, பாண்டூர்,தடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் 30 அணிகள் இந்த கபடி போட்டியில் பங்கு பெற்றது. இந்த கபடி போட்டியின் இறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து இந்த போட்டியில் முதல் பரிசை வென்ற ஆந்திர மாநிலம் நாகலாபுரம் கபடி அணிக்கு 25ஆயிரம் ரூபாய் முதல் பரிசை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் வழங்கி பாராட்டினார்.

2ஆம் பரிசாக ரூபாய் 18ஆயிரத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள ரட்சண்யகுப்பம் கபடி அணிக்கும், 3ஆம் பரிசாக ரூபாய் 12ஆயிரத்தை அதிமுக மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ஜெ.ரமேஷ்குமார் பெரிய ஓபுளாபுரம் கபடி அணிக்கும், 4வது பரிசாக ரூபாய் 8ஆயிரத்தை போந்தவாக்கம் அணிக்கு அதிமுக நிர்வாகியும், போட்டி ஏற்பாட்டாளருமான டேவிட் சுதாகர் வழங்கினார். மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்ப்படப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து