முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் தேசிய அளவவிலான யோகாசனப் போட்டியில் சாதனை

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      தேனி
Image Unavailable

கம்பம்,-தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ சக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்தனர்.அவர்கள் பள்ளி தாளாளர் அச்சுநாகசுந்தர் மனதார பாராட்டினார்.
கம்பம் சக்தி விநாயகர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களின் இடையே உள்ள வெளியில் தெரியதா திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு பல் வேறு விளையட்டு போட்டிகள்,கட்டுரைப் போட்டிகள், பேச்சு போட்டிகள் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டும் யோகா,கராத்தே போன்ற அனைத்து விஷயங்களும் கட்டுத் தரப்படுகின்றன.இங்கு கற்றுத் தரப்பட்ட யோகா கலையை  வைத்து  தேசிய அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு மாணவ மாணவிகளின் திறமை பெற்றிருந்தனர்.இந்த திறமையை பயன்படுத்தி தேசிய அளவிலான யோகா போட்டிகளில் கலந்து கொண்டு வராலற்று சாதனை படைத்தார்கள்.அவர்களின் சாதனையை பாராட்டும் விதமாக பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் யோகா போட்டியில் வரலாற்று சாதனை படைத்த மாணவ மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அச்சுநாகசுந்தர் தலைமை வகித்து மாணவ மாணவிகளை பாராட்டி பள்ளி சார்பில் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் பள்ளி யின் இயக்குனர் கவிதா அச்சு நாகசுந்தர்,மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் கருப்பசாமி நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து