முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், மகளிர் திட்டம் சார்பாக, உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை, கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,  தலைமையில்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்   வழங்கினார்.

அம்மா இரு சக்கர வாகன திட்டம்

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனங்களை வழங்கி  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  விழாப்பேருரையாற்றினார்.விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 4175 அம்மா இரு சக்கர வாகனங்ளும், நகர்ப்புற பகுதிகளில் 744 வாகனங்களும் என மொத்தம் 4919 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் ஒரு லட்சம் அம்மா இரு சக்கர வாகனங்களில், அதிகமான எண்ணிக்கையில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கும் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 21 சதவீதமும், மலைவாழ் மகளிருக்கு 1 சதவீதமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதமும் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்க, இருசக்கர வாகனத்தின் 50 சதவீத விலை அல்லது ரூ.25,000- இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா  அளித்த வாக்குறுதியின்படி, சட்டப்பேரவையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்க அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.  இத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு  தமிழ்நாடு முதலமைச்சர்  16.02.2017 அன்று பதவியேற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் முதல் திட்டமான அம்மா இருசக்கர வாகன திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு,  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான 24.02.2018ம் தேதி அன்று  பாரதப் பிரதமர்,  முதலமைச்சர்  இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.  அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது.  வாகனங்களை பெற்ற அனைத்து மகளிரும் கட்டாயமாக வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.மேலும், சமுதாயத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக செயல்பட வேண்டும் எனவும்,  எவரது உதவியின்றியும், சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என வேண்டி, அம்மா  மகளிர் காவல் நிலையம், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்குத் தங்கம், விலையில்லா மிதிவண்டி, இலவச பாடப்புத்தகம், சேனிட்டரி நாப்கின், விலையில்லா மடிக்கணினி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெண்களுக்கென வழங்கியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, அம்மா  வேலைக்குச் செல்லும் பெண்கள், பயணம் செய்வதற்கு ஏதுவாக, அம்மா இருச்சகர வாகன திட்டத்தினை அறிவித்தார்கள்.  அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இவ்வரசு அம்மா  அறிவித்த அனைத்துத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. எனவே, மக்கள் இவ்வரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  கேட்டுக்கொண்டார்.இவ்விழாவில், விழுப்புரம் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்.இரா.இலட்சுமணன், விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராஜேந்திரன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சிசேவல் வெ.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, வானூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.சக்ரபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சு.சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் ப.குணசேகரன், கமல்ராஜ், சித்ரா, முத்துபாண்டியன், மணிவண்ணன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர் சுந்தரராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து