முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் உறுப்பு தானத்தால் 5 பேரை வாழ வைத்த பெண் - நெல்லையில் நெகிழ்ச்சி சம்பவம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      திருநெல்வேலி

துாத்துக்குடியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் நெல்லை கிட்னி கேர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டு, 5பேருக்கு பொருத்த பல்வேறு பகுதி களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

உடலுறுப்புக்கள் தானம்

துாத்துக்குடி மாவட்டத்திலு்ள, சாயர்புரம், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சிவகுரு, இவரது மனைவி சாந்தா(35). இவர்களுக்கு வினித் குரு(15), குருசரண் (7) என்ற மகன்களும், குரு ஷர்மிதா(11) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிவகுரு, அவரது மனைவி சாந்தா, மகள் குருஷர்மிதா ஆகியோர் பைக்கில் துாத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் சென்ற னர். அப்போது அந்த வழியாக வந்த பைக், சிவகுரு பைக் மீது மோதியது. இதில் சாந்தாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிவகுருவிற்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.படுகாயமடைந்த சாந்தாவை துாத்துக்குடி ஆஸ்பத் திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்ப த்திரியில் கொண்டு சென்றனர். அங்கு சாந்தாவிற்கு மூளை சாவு ஏற்பட்டது தெரிய வந்தது.இதனையடுத்து சாந்தா உடலை கடந்த 3ம் தேதி துாத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனையறிந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர், சிவகுருவிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விளக்கி கூறினார்.இதற்கு சிவகுரு மற்றும் குடும்பத்தினர், சாந்தாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதனையடுத்து நெல்லை கிட்னி கேர் ஆஸ்பத்திரிக்கு சாந்தாவின் உடல்  ஞாயிற்றுக்கிழமை  இரவு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நரம்பியல் டாக்டர் சாந்தாவின் உடலை பரிசோதனை செய்தார். இதனைத்தொடர்ந்து மூளை சாவை உறுதி செய்யும் இறுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகளின் முடிவில் சாந்தா மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நெல்லை கிட்னி கேர் சென்டர் தலைமை டாக்டர் பாலசுப்பிரமணியன், டாக்டர்கள் ஆவுடையப்பன், பூர்ணலிங்கம், அன்புராஜன், கண்ணன் தலைமையில் அரசு பரிந்துரை செய்த 2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு மூளைச்சாவு அடைந்த சாந்தாவின் இதயத்தை பரிசோதனை செய்த போது, அதன் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதது தெரிய வந்தது. இதயத்தை அகற்றும் பணியை டாக்டர்கள் குழுவால் கைவிடப்பட்டழது. இதனையடுத்து சாந்தாவின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் என 5உடல் உறுப்புகளை டாக்டர்கள் குழுவினர் பாதுகாப்பாக அகற்றினர். இதனைத் தொடர்ந்து திருச்சி அப்பலோ ஆஸ்பத் திரிக்கு கல்லீரலும் , தஞ்சாவூர் மீனாட்சி மிஷினிற்கு ஒரு சிறுநீரகமும் ஆம்புலன்சில்  திங்களன்று இரவில் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. நெல்லை அகர்வால் ஆஸ்பத்திரிக்கு கண்கள் கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், கிட்னி கேர் சென்டருக்கு வழங்கப்பட்டது.உடல் உறுப்புகளை எடுத்து செல்லும் ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்காக மாநகர போலீசார் கான்வாய் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து