முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை   மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் நேற்று துவங்கியது. பொருளாதாரத் துறை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக , சமூக பணி செய்து வரும் திருநங்கை டாக்டர் . பாரதி கண்ணம்மா கலந்து கொண்டு , மாணவிகளிடையே பேசினார். விழாவில் , ஜான் ஜெயகாமராஜ் இறை வணக்கம் பாட, டாக்டர் .எஸ் . ஜெயராணி வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் பேராசிரியர் பாக்டர் .சி.முத்துராஜா கலந்து கொண்டார். விழாவில் விருந்தினராக டாக்டர் .ஜே.சரோஜினி கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல திருநங்கை பாரதி கண்ணம்மா பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் , அதை எவ்வாறு தாங்கிக் கொண்டு , வெற்றி வீரமங்கைகளாக சமுதாயத்தில் உலா வருவது என்பன பற்றியும் மாணவிகளிடையே பேசினார். நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏராளமான மாணவிகள் பாரதி கண்ணம்மாவுடன் ஷெல் பி போட்டோ எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. விழாவில் மேலும் பேராசிரியைகள் டாக்டர் .கே. உஷா , டாக்டர் .எஸ் . வனிதா ஆகியோரும் கலந்து கொண்டனர். விழா நன்றியுரை டாக்டர் .எம். ஷுலா கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து