அரசுப் பள்ளிமாணவர்கள் எழுதிய தொல்லியல் கட்டுரைகள் நூல் அறிமுகவிழா

புதன்கிழமை, 7 மார்ச் 2018      ராமநாதபுரம்
Archaeological articles 7 3 18

ராமநாதபுரம்,- ராமநாதபுரம்மாவட்டம்திருப்புல்லாணியில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய தொல்லியல் கட்டுரைகள் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதாஅழகன் நினைவு அரசுமேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் ஊர்களின் பெயர் காரணங்கள், கிராம கோவில்கள் வரலாறு, வழிபாட்டு முறைகள், கிராமத்து பாடல்கள், புதிய வரலாற்று தடயங்கள் பற்றி களஆய்வின் மூலம் சேகரித்த தகவல்களை திரட்டி கட்டுரைகளாக எழுதிஉள்ளனர். இதில் 12 மாணவ,மாணவிகளின் 14  கட்டுரைகளையும், இம்மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு எழுதிய ஒரு கட்டுரையையும் தொகுத்து ‘தேடித்திரிவோம் வா" எனும் பெயரில் நூலாக உருவாக்கி உள்ளனர். இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் அறிமுகம் செய்யும் விழாநடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தலைமை வகித்தார். பத்தாம் வகுப்பு மாணவி அபர்ணா வரவேற்றார். மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர், தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் மாணவர்களின் படைப்புகளை அறிமுகம் செய்து வெளியிட்டார். முதல் படைப்பை  ராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனை காப்பாட்சியர் பா.ஆசைத்தம்பி பெற்றுக்கொண்டார். இந்நூலில் கட்டுரை எழுதிய 12 மாணவ, மாணவியருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவிகள் மு.விசாலி, மு.அபிநயா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் செயலாளர் சோ.ஞானகாளிமுத்து நன்றி கூறினார். திருப்புல்லாணி பள்ளியின் பழைய மாணவர் சங்க தலைவர் மலைக்கண்ணன் 50 மாணவர்களுக்கும், பள்ளியின் முன்னாள் மாணவி ஜெயகௌரி 20 மாணவர்களுக்கும் இந்த நூலை தங்கள் செலவில் இலவசமாக வழங்கினர். நரசிங்கக்கூட்டம் பள்ளித் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளானூர் பள்ளி ஆசிரியர் முனியசாமி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்; விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் திருப்புல்லாணி, பள்ளபச்சேரி, பொக்கனாரேந்தல், பால்கரை, உத்தரவை, தாதனேந்தல், கீழப்புதுக்குடி, கோரைக்குட்டம், பஞ்சந்தாங்கி, முத்துவீரப்பன்வலசை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து