நவாஸ் மீதான ஊழல் வழக்கு விசாரணை மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்க அனுமதி

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
Nawaz Sharif 2018 3 8

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் நீட்டித்தது.

பனமா ஆவணங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமனறம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார். இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பதை விசாரிக்கும்படி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

அதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அளித்த உத்தரவில், ஆறு மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு விசாரணையை முடிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும், அதற்குள் வழக்குகள் முடிவடையும் நிலையில் இல்லாததால், இந்த காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இஜாஸ் அப்ஸல் கான் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று நீட்டித்து உத்தரவிட்டது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து