முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரபு மாநாட்டில் பங்கேற்க கத்தாருக்கு தடை கிடையாது - சவூதி இளவரசர் தகவல்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

ரியாத் : இந்த மாத இறுதியில் சவூதி அரேபியா தலைநகர் ரியாதில் நடைபெறவிருக்கும் அரபு மாநாட்டில் கத்தார் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படாது என்று சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்தார்.

அரபு நாடு இல்லாத, ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானுடன் சேர்ந்து பயங்கரவாதத்தைப் பரப்பி வருவதாக கத்தார் மீது குற்றம் சாட்டிய சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், அந்த நாட்டுடனான தூதரக உறவை கடந்த ஆண்டின் ஜூன் மாதம் துண்டித்தன. அதனைத் தொடர்ந்து, ரியாதில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அரசு மாநாட்டில் கத்தார் நாடு கடந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் புதன்கிழமை கூறியதாவது:

கத்தாருடனான எங்களது பிரச்னைக்கு அரபு அல்லது வளைகுடா நாடுகளின் கட்டமைப்புக்கு வெளியே எடுக்கப்படும் தீர்வுகளை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். எனினும், அதற்காக இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் அரபு மாநாட்டில் கத்தாரை பங்கேற்க விடாமல் செய்ய மாட்டோம். அமெரிக்காவுக்கு கியூபாவுடன் நீடிக்கும் பிரச்னை போல, கத்தாருடனான சவூதி அரேபியாவின் பகை அவ்வளவு விரைவில் தீர்ந்துவிடாது.

ஈரான், துருக்கி, பயங்கரவாதக் குழுக்கள் ஆகிய மூன்றும் மிகவும் பயங்கரமான மும்முனை கூட்டணியாகும். எகிப்து மற்றும் பெரும்பாலான வளைகுடா நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து